Forrest Gump திரைப்படம்

சில படைப்புகள் நம் மனதின் இறுக்கத்தை, அழுத்தத்தை குறைத்து லேசாக மாற்றி விடும். அப்படி ஒரு படைப்புதான் Forrest Gump திரைப்படம். Tom hunk ன் யதார்த்தமான நடிப்பும் Robert zemeckis இயக்கமும் சிறப்பு. ஆரம்பத்திலும், முடிவிலும் இறகு பறப்பது போல காட்சி வரும், படம் முழுக்க ஓடிக்கொண்டே இருப்பான் ஓடுவது என்பது அவன் மனதில் உண்டான காயங்களுக்கு மருந்தாக அந்த இறகை போல இதமாக இருக்கிறது. நம் வாழ்வில் சிறு சிறு மகிழ்ச்சிதான் பெரிய துன்பங்களைகூட கடக்க உதவுகிறது. இந்த படத்தில் கதாநாயகன் தன் வாழ்வில் நடந்த அனுபவத்தை பேருந்து நிறுத்தம் மர நிழலில் தான் அருகில் அமரும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் சொல்லி கொண்டிருப்பான். ஒவ்வொருவரும் அவரவர் பேருந்து வரும்போது போய் விடுவார்கள், ஆனால் ஒருவர் பின் ஒருவர் அவன் கதையை கேட்க வந்து கொண்டே இருப்பார்கள், நம் கதையை யாரும் கேட்க வில்லை என்று கவலை பட வேண்டாம். இந்த உலகம் கதைகளால் நிரம்பியது, உலகில் கடைசி உயிர் இருக்கும் வரை யாரோ நம் கதையை கேட்டுகொண்டே தான் இருப்பார்கள்.நம் கதையை நாம் முழுமையாக வாழ வேண்டும் என்பதே முக்கியம்.

Leave a comment