சுமார் 12 கோடி வருடத்திற்கு முந்தைய ஒரு காலைப் பொழுது அது, வானுயர்ந்த மரங்கள் அவற்றை உண்ண மாமிசமலைகளாய் அசைந்து நடந்து வந்தது, இரண்டு திராவிட சரஸ் (இந்தியாவில் வாழ்ந்த டைனோசர்). ஒன்றின் பெயர் சின்னகருப்பன், மற்றொன்றின் பெயர் பெரிய கருப்பன்
சின்னக்கருப்பன் : என்ன பெரிய கருப்பா நேத்து ராத்திரி நல்ல தூக்கமா?
பெரிய கருப்பன்: நல்ல தூக்கம் தான்டா சின்ன கருப்பா
எனக்கு ஒரு சந்தேகம் சந்தேகம்
என்ன சந்தேகம் கேளு
இந்த உலகத்தில் நாமதான் பெரிய ஆளுங்க நம்மளை எதிர்க்க இங்கு யாரும் இல்ல, நாம தான் இந்த உலகத்தையே ஆளுரோம். எப்படி நம்மளால இந்த உலகத்தை ஆள முடிந்தது
நம்ம கடவுள் பச்சை டைனோசர் சாமி தான் இந்த உலகத்தை படிப்படியா படைத்தது. இந்த பூமியை ஆள்வதற்காக நாம படைக்கபட்டோம். மற்ற உயிர்கள் எல்லாம் நமக்கு சேவை செய்ய படைக்கப்பட்டதுதான். நம்மளோட உயர்ந்த தன்மையை கருதி தான் கடவுள் அவரோட உருவத்திலேயே நம்ம பாடைச்சி ட்டார்
நம்ம விட வலிமையான மிருகம் இந்த பூமியில எதிர்காலத்துல உருவாகி வாழ வாய்ப்பு இருக்கா?
அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா நாமதான் நிரந்தரமாக ஆளப் போகிறோம்
பேசிக்கொண்டே தங்களது இருப்பிடம் சென்று சேர்ந்தார்கள்
இது ஒரு கற்பனை கதை தான் ,இந்த பூமியில் நம்மை விட வலிமையான ஒரு மிருகம் வாழ்ந்து முற்றும் அழிந்துபோன வரலாறு, கர்வத்தோடு சுயநலமாக இயற்கையை அழித்துக் கொண்டிருக்கும் மனித குலத்திற்கு ஒரு எச்சரிக்கை.
சரி ,வாருங்கள் இனி எனது டைனோசர் முட்டைகளை நோக்கி சென்ற பயணத்தை சொல்கிறேன்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சாத்தனூர் என்கிற கிராமத்தில் தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. சரியாக பெரம்பலூரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்போது சாத்தனூரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் கடல் உள்ளது. ஆனால் 12 கோடி வருடம் முன்பு 10 கிலோ மீட்டர் அருகில் கடல் இருந்திருக்கிறது, அப்படி பார்த்தால் பெரம்பலூர் ,அரியலூர் மாவட்டம் ஒரு காலத்தில் கடலில் தான் இருந்திருக்கிறது
காலை 9 மணி அளவில் அங்கே போய் சேர்ந்தோம். போகும் வழியிலேயே வெள்ளை நிறமாக கரடுமுரடாக சில பகுதிகள் வரும் அது கடல் இருந்தது என்று நினைக்கிறேன்.
இங்க எப்படி கடல் உருவானது என்று கேட்கிறீர்களா ?சொல்கிறேன் கேளுங்கள்,
12 கோடி வருடம் முந்தைய காலத்தை பொற்காலம் என்பார்கள். அந்த காலத்தில் விண்கல் ஒன்று பூமியில் வந்து விழுந்தது, விளைவு பூமியின் தட்பவெப்ப சூழலை பெரிதும் மாறியது(விண்கல் விலுந்ததின் எச்சம் மெக்சிகோவில் காணப்படுகிறது)
அதனால் கடல் நீரின் அளவு உயர்ந்தது விளைவாக பூமி முழுக்க நிறைய உள்நாட்டு கடல்கள் உருவானது, அப்படித்தான் இந்த பகுதியிலும் கடல் உருவானது என்கிறார்கள் ஒரு சில ஆரய்ச்சியாளர்கள்
சாத்தனூர் கல்மர பூங்காவில் டைனோசர் முட்டை ஒன்று உள்ளது, பாதி உடைந்த நிலையில் உள்ள அந்த முட்டையில் உள்ளே இருந்த குட்டியின் படிமம் தெரிகிறது, இப்படி மற்ற இடத்தில் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.
இதெல்லாம் எப்படி இன்றுவரை நீடித்து இருக்கிறது என்ற கேள்வி எழலாம்?
அந்த காலத்தில் வாழ்ந்த டைனோசர் எலும்புகள் அதன் முட்டை மற்றும் மரம் போன்றவை ஆற்று நீரால் அடித்து இந்த கடலில் கலந்திருக்கிறது.இந்த எச்சங்களின் மீது களி மண் படிந்து காலப்போக்கில் அழுத்தம், வெப்பம் காரணமாக பாறைகளாக மாறிவிட்டன. இப்படி உருவானதுதான் இங்கிருக்கும் கல்மரம். இந்த கல்மரம் 18 மீட்டர் நீளமுள்ளது சுற்று கிராமங்களிலும் இந்த கல்மர பகுதிகள் கிடைக்கின்றன .1940-ஆம் ஆண்டு எம் எஸ் கிருஷ்ணன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது
டைனோசர் எப்படி தான்அழிந்தது? என்று கேட்கிறீர்களா ?அந்த காலத்தில் இந்தியா ஆசியாவோடு இல்லை தனி தீவாக இருந்தது, அப்போது மத்திய இந்தியாவில் ஒரு எரிமலை இருந்திருக்கிறது, அது வெடித்து பல ஆண்டுகளாய் தீ குளம்புகளை வெளியில் தள்ளி இருக்கிறது. அந்த தீ குளம்புகளால் உருவானதுதான் இன்றைய தக்காண பீடபூமி(Deccan Plateau) என்கிற மேட்டுநிலம். அந்த எரிமலை வெடிப்பில் நஞ்சு வாயு காற்றில் கலந்ததன் விளைவாக டைனோசர்கள் மற்றும் 25kg எடைக்கு மேல் உள்ள விலுங்குகள் அனைத்தும் அழிந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்
ஆனால் இதனை ஒரு சாரார் மறுக்கிறார்கள், எரிமலை வெடித்தது உண்மை தான், அதற்கான சான்றுகள் தக்காண பீடபூமியில் கிடைக்கின்றன, ஆனால் டைனோசர்கள் அந்த பேரழிவில் முற்றிலும் அழியவில்லை என்கிறார்கள் மற்ற ஆராய்ச்சியாளர்கள்
எப்படி இருப்பினும் டைனோசர்களின் அழிவு நமக்கு சொல்லும் முக்கிய பாடம் நாம் எவ்வளவு வலிமையான இனமாய் இருப்பினும், இயற்கைக்கு முன்பு சாதாரண வலிமையற்றவர்கள்தான். இதனை உணர்ந்து இயற்கையை அழிக்காமல், இயற்கை அனுமதிக்கும் வரை நாமும் வாழ்ந்து நம் சக உயிர்களையும் வாழ விடுவோம்

