சூரரை போற்று : நம்பிக்கையை போதிக்கிறது

வசனங்கள்தான் எனக்கு இந்த படத்தில் முதலில் கவர்ந்த விசயம்  ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமும் ஆழமும் நிறைந்தவை வசனம் எழுதிய உறியடி நாயகன் விஜய் குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். இயக்குனர்   சுதா கொங்கரா  வின் இயக்கம் மிக சிறப்பு, நாயகன் நாயகியின் திருமணத்தை சுயமரியாதை திருமணமாக காட்சி அமைத்த தற்கு  இயக்குனர்க்கு பாராட்டுக்கள் .சோக காட்சிகளில் சூர்யாவின் நடிப்பு நம்மை அறியாமல் கண்ணீரை வர வைத்து விடுகிறது.   “நம்மள பணத்தை விட்டு அடிக்கதான் பார்பானுங்க, முடியாதுனு சொல்றது தான் நம்ம பலமே” என்று ஒரு வசனம் வரும் நம் கனவின் மீது நமது லட்சியம் மீது நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும் என்று ஆணித்தரமாக சொல்கிறது இந்த வசனம். இந்த படத்தில் மாறன் இறுதியில் வெல்லும்போது நாமே வென்ற ஒரு உணர்வு.நம்மில் இருந்து ஒருவன் வெல்லும்போது அப்படிதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.நடிகை என்பவளை அலங்கார பொருளாக காட்டும் சூழலில் தனது லட்சியத்தை தானும் வென்று கணவன் லட்சியத்தை யும் அடைய ஊக்குவிக்கும் உறுதி மிக்க பெண்ணாக நடிகை அபர்னாவை காட்டிய விதம் பாராட்ட படவேண்டிய விசயம். பெண் இயக்குனர்கள் இன்னும் நிறைய வர வேண்டும், பெண்களை அலங்கார பொருளாக இல்லாது சுய மரியாதை மிக்க பெண்களாக காட்ட வேண்டும்.நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல படம் பார்த்த மன நிறைவு. வசனம் எழுதிய விஜய் குமார், நடித்த நாயகன் சூர்யா,இயக்கிய சுதா கொங்கரா, உண்மை நாயகன் கேப்டன் கோபி நாத் மற்றும் பட குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அனைவரும் பார்க்க வேண்டிய படம் நிச்சயம் பாருங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s