2020 உனக்கு ஒரு கும்புடு

2020ஆம் ஆண்டே….

பல ஆண்டுகள் வந்து கடந்து போயினும் நீ மிகவும் வித்தியாசமான ஆண்டு

நீ ஏற்படுத்திய பிரச்சினைகளும் அதன் தொடர்ச்சியாய் கற்று கொடுத்த பாடங்களும் எராளம்

கனவிலும் நினைக்கா காரியமெல்லாம் சாத்தியமே என்று காட்டினாய், உலகை முடக்கி விந்தை செய்கிறாய்

நீ ஏற்படுத்திய காயமே இன்னும் ஆறவில்லை அதன் தழும்பு மாற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ

நிரந்தரம்,நிச்சயம் என்கிற வார்த்தை எல்லாம் அர்த்த மற்றவை, எதுவும் மாறும் அது எப்போதும் மாறலாம் என்று உரக்க கூறி இருக்கிறாய்

குடும்பத்தோடு கூடி வாழ பொன்னான நேரம் தந்தாய், மாற்றத்தை எதிர் கொள்ள எப்போதும் தயாராய் இரு என்று புத்திக்கு உரைக்கும் படி நிகழ்வுகளை நிகழ்த்தி காட்டி யிருக்கிறாய்

பிரச்சினைகளை எதிர் கொள்வதன் மூலம்தான் நாம் வலிமை அடைகிறோம், அந்த வகையில் நீ எங்களை மேலும் வலிமை பெற வைத்துள்ளாய், அந்த வலிமையோடு உனக்கு நன்றி கூறி 2021ம் புத்தாண்டை நம்பிக்கையோடு வரவேற்கிறேன்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Happy New year

Leave a comment