தமிழக மின் வெட்டின் கதை

மதிப்பிற்குரிய அய்யா சா.காந்தி அவர்கள் எழுதிய “தமிழகத்தில் மின்வெட்டும் மின் கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்” புத்தகம் படித்தேன்

தமிழகத்தில் நடக்கும் மின் வெட்டிற்கு முக்கிய காரணம் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன? என்று ஆழமாக அலசுகிறது இந்த புத்தகம்

மின்சாரத்துறையில் மிக நீண்ட அனுபவம் கொண்ட இவர் ஏராளமான தரவுகளோடு இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மின்சார சட்டம் ஏற்படுத்திய பாதிப்புகளையும், புதிதாக உருவாக்கிய ஆணையத்தால் நடந்த குளறுபடிகளையும், முக்கியமாக பிரச்சனைகளுக்கான தீர்வையும் ஐயா சா.காந்தி விரிவாக எழுதியுள்ளார்

தமிழக மின்சாரத் துறை பற்றி அறிய விரும்புவோர் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது

Leave a comment